கதிரிமங்கலம் பகுதியில் மின்கம்பத்தில் மின்சாரம் தாக்கி ஒப்பந்த பணியாளர்கள் உயிரிழப்பு*
திருப்பத்தூர் மாவட்டம் கதிரிமங்கலம் பகுதியில் மின்கம்பத்தில் மின்சாரம் தாக்கி ஒப்பந்த பணியாளர்கள் உயிரிழப்பு திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த பூரிகமாணிமிட்டா பகுதியைச் சேர்ந்த கோவிந்தன் மகன் மாரி வயது 45 இவர் கதிரிமங்கலம் பகுதியில் உள்ள மின்துறை அலுவலகத்தில் ஒப்பந்த பணியாளராக ஏழு வருட காலமாக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் கதிரிமங்கலம் பகுதியில் திடீரென மின்சார கம்பம் பழுதாகி மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில் மின்சார கம்பத்தை சரி செய்ய எந்த ஒரு அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்காமல் மாரி மின்சார கம்பத்தை பழுதனை சரி செய்ய மின் கம்பத்தில் ஏறியதாக தெரிகிறது. அப்போது திடீரென மின்சாரம் தாக்கியதில் தூக்கி எரியப்பட்டு மாரி கீழே விழுந்தார் இதனை அறிந்த அக்கம்பாக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே மாரி உயிரிழந்தவர்களாக தகவல் தெரிவித்தனர். மின்சார கம்பத்தில் பழுது காரணமாக சரி செய்ய ஏரிய ஒப்பந்த பணியாளர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெறும் ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Next Story



