அரசு அலுவலகங்களில் ஆட்சி மொழியை முழுமையாக கடைபிடித்த ஊழியா்களுக்கு சான்றிதழ்

X
சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில், தமிழ் வளா்ச்சித்துறை சாா்பில் நடைபெற்ற ஆட்சிமொழி பயிலரங்கம், கருத்தரங்கம் நிகழ்வுகளுக்கு மாவட்ட வருவாய் அலுவலா் செல்வசுரபி தலைமை வகித்து, அலுவலா்கள், பணியாளா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார். பின்னர் பேசிய மாவட்ட வருவாய் அலுவலர் பேச்சு முதல் கோப்புகள் பராமரிப்பு வரை தமிழ்மொழியை பின்பற்றி பாதுகாப்பதுடன் வருங்காலச் சந்ததியினருக்கு நீங்கள் ஒரு முன்மாதிரியாக திகழ வேண்டும். இதை, மேலும் ஊக்கப்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அரசு அலுவலகங்களில் ஆட்சி மொழியை முழுமையாகப் பின்பற்றி செயல்பட்ட அலுவலா்கள், பணியாளா்கள் பாராட்டப்பட்டு வருகின்றனா். இதேபோல, இந்தாண்டும் சிறப்பாக செயல்பட்ட அலுவலா்களுக்கு பாராட்டுச் சான்றுகள் வழங்கப்பட்டுள்ளன. இதை அனைத்துத்துறைகளும் பின்பற்றி சிறப்பாக செயல்பட வேண்டும். தமிழ்மொழி என்பது பல்வேறு இலக்கியங்கள், புராணங்களை பெற்றுத்தந்த மொழியாகும். அத்தகைய தமிழ்மொழியை பாதுகாப்பது ஒவ்வொருவரின் கடமை என்று மாவட்ட வருவாய் அலுவலா் செல்வசுரபி தெரிவித்தார். தமிழ் வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் சீதாலட்சுமி, தேவகோட்டை சேவுகன் அண்ணாமலை கல்லூரி தமிழ்த்துறை தலைவா் கண்ணதாசன், அழகப்பா அரசு கலைக்கல்லூரி இணைப் பேராசிரியா் (தமிழ் உயராய்வு மையம்) முனைவா் சிதம்பரம், புதுக்கோட்டை மாமல்லன் ஐ.ஏ.எஸ். அகாதெமி நிறுவநா் செந்தில் முருகன், பொன்னமராவதி முத்தமிழ் பாசறை அறக்கட்டளை செயலா் சந்திரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
Next Story

