சீமான் பேச்சு

X
ஈரோடு பெருமாள் மலைப்பகுதியில் பட்டாவுக்காக போராடும் மக்களை இன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரடியாக சந்தித்து அவர்களது குறைகளை கேட்டு அறிந்தார். பின்னர் நிருபர்களுக்கு சீமான் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- பெருமாள் பகுதி மக்கள் 70 ஆண்டுகளாக இங்கே வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள் . தாயகம் திரும்பிய நம்மளுடைய சொந்தங்கள் இங்கேயே வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். அங்கிருந்த மக்கள் இங்கு குடி இருக்க சொல்றது அரசாங்கம் தான். இப்போ அரை நூற்றாண்டுகளாக கடந்து இங்கேயே மூன்று தலைமுறையாக வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள் . எந்த அடிப்படை வசதியும் இல்லை.தற்போது திடீரென இந்த இடம் அறநிலையத்திற்கு சொந்தமான இடம் நீங்கள் காலி செய்ய வேண்டும் என்கிறார்கள். வாடகை கொடுக்க வேண்டும் என்கிறார்கள். கூலி வேலைக்கு செல்லும் இந்த மக்களின் வருவாயைக் கொண்டு இந்த அரசு எவ்வளவு வருவாயை பெருக்கப் போகிறது. அறநிலைத்துறையில் அறம் எங்கு உள்ளது. இந்த இடத்தை அரசு எடுத்து என்ன செய்யப் போகிறது. கரூரிலும் இதே பிரச்சினை வந்தது. கோவிலுக்கு எதுக்கு இடம். சொந்த நாட்டில் சொந்த இடத்தில் அகதிகளாக நிலமற்ற கூலிகளாக இருக்க வேண்டுமா? இதுதான் நல்லாட்சியா. தேர்தலின் போது வாக்குறுதி கொடுத்து செல்வது. வென்ற பிறகு கண்டுகொள்ளாமல் செல்வது வாடிக்கையாகிவிட்டது. ஏழை மக்களின் கண்ணீர் எவ்வளவு பெரிய கோட்டையும் சரித்து விடும். உலகில் வலிமையான ஆயுதம் ஏழை மக்களின் கண்ணீர் ஆகும். இதைப் புரிந்து வேலை செய்ய வேண்டும். இப்பகுதி மக்களுக்கு வீடுமனை வழங்க வேண்டும். அவர்களுக்கு மின் இணைப்பு உடனடியாக வழங்க வேண்டும். ஆட்சிக்கு வந்த மூன்றரை ஆண்டுகளும் மூன்று முறை மின் கட்டணங்களை உயர்த்தி உள்ளனர். சுந்தரம் பெற்று 75 ஆண்டுகள் கடந்துவிட்ட பிறகும் இன்னும் மின் இணைப்புகள் இல்லாத நிலை எவ்ளோ கேவலமானது. நான் பெரியாரை இழிவு படுத்தவில்லை. பெரியார் என்ன பேசி இருந்தாரோ எழுதியிருந்தாரோ அதை எடுத்து பேசினேன். பெரியாரைப் பற்றி அனைவரும் பேசுகிறார்கள் கனிமொழி உட்பட. பெரியார் என்ன பேசினார்? பெரியார் என்ன எழுதினார் என்று எடுத்துப் பேச உங்களுக்கு யாருக்கும் துணிவு இல்லை. பெரியார் யார் தெரியுமா என்று கேட்கிறீர்கள் தெரியவில்லை சொல்லுங்கள் என்றால் சொல்ல மறுக்கிறீர்கள். பெரியாரை தமிழ்நாட்டில் பேரறிஞர் அண்ணா, கருணாநிதி அளவுக்கு யாராவது இழிவு படுத்தி பேசி உள்ளார்களா? பெரியார் எங்கு சாதி ஒழிப்பை நீக்கினார். பெரியார் பற்றி பேச உங்களுக்கு என்ன தகுதி உள்ளது. பெரியாரை பற்றி பேசும் பெருமக்கள் பெரியார் பேசியது எழுதியதை பேச துணிவில்லை. கனிமொழி பெரியாரிஸ்டா?கடவுள் மறுப்பிலா?சமூக நீதி,பெண்ணிய உரிமை? திமுக கொடுத்த பெண்ணிய உரிமையை பேச முடியுமா?பெரியார் எங்கு சாதி ஒழிப்பு நிலையம் கட்டியுள்ளார்? பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையென்பதை பெண்ணிய உரிமை நிலை நாட்டிய பெரியாரிய பெருமக்களிடம் கேட்க வேண்டும்.அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் படிக்கும் மாணவிக்கு பாதுகாப்பு இல்லை.ஈசிஆர் சாலையில் பயணித்த திமுக கட்சி கொடியுடன் வந்த காரில் குறுக்காட்டி தடுத்துள்ளனர்.கேட்டால் இடித்துவிட்டது என பொய் பேசுகின்றனர். பொள்ளாச்சியில் கூட்டு பாலியல் வன்கொடுமை விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்த நிலையில் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.தூத்துக்குடி துப்பாக்கி சம்பவத்தில் இரண்டு முறை எம்.பி.யான கனிமொழி என்ன நடவடிக்கை எடுத்தார்.அருணா ஜெகதீசன் தாக்கல் செய்த அறிக்கைக்கு நடவடிக்கை என்ன?கொட நாட்டில் நடந்த கொலையில் நடவடிக்கை எடுக்கவில்லை. திராவிட இயக்கத்திற் பரிமாற்றத்தில் பிராமண பெண் தலைமையேற்று காலில் விழுந்து திராவிடன் பதவி அனுபவித்தனர். பெரியாரிஸ்ட் சாதிக்க முடியாததை பார்ப்பன பெண் சாதித்தது.ஆ.ராசாவை தமிழனா பார்க்காமல் தாழ்த்தப்பட்டவரா பார்த்து நீலகிரி தொகுதியில் நிறுத்துவீர்கள்.நீங்கள் சமூக நீதி, சனாதன ஒழிப்பை பேசுவீர்கள்.எனது மூதாதையர்கள் மயங்கி கிடந்தது ஒரு காலம். அருந்ததியரில் ஒருவரை சபாநாயகராக மாற்றியது பிராயன பெண்.எங்கு உள்ளார் பெரியார். கல்வியை மிகப்பெரிய வியாபார பண்டமாக மாற்றிவிட்டனர்.எம்ஜிஆர் கடைசியில் தனது சொத்தை காதுகேளார் வாய் பேச முடியாதவர் அறக்கட்டளைக்கு எழுதி வைத்தார். பெரியார் என்ன செய்தார்?உங்கள் வீட்டில் கை கட்டி நிற்கிறேனா? கூலி என்கிறாய்? 500 ஆயிரம் ரூபாய் கொடுத்து வாக்குகளை பறிக்கிறார் நீதான் கூலி.வாக்கிற்கு பணம் கொடுக்காமல் நின்று காட்டு.ஆதவ் அர்ஜீன் தவெகவில் இணைவது அவரது விருப்பம். இவ்வாறு அவர் கூறினார்.
Next Story

