துணை ராணுவப்படையினர் விரைவு

துணை ராணுவப்படையினர் விரைவு
X
ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் பணிக்காக மேலும் 2 துணை ராணுவப்படையினர் வருகை தர உள்ளனர் அதிகாரிகள் தகவல்
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 5-ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தல் பாதுகாப்பு பணிக்காக மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் (துணை ராணுவத்தினர்) வரவழைக்கப்பட்டுள்ளனர்.இந்த தேர்தலில் கிழக்கு தொகுதி மக்கள் வாக்களிக்க 53 இடங்களில், 237 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், 9 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளன.இந்த நிலையில், பாதுகாப்பு பணிக்காக கோவையை சேர்ந்த தமிழ்நாடு சிறப்பு காவல் படை 4-வது பட்டாலியனைச் சேர்ந்த 160 போலீசார் கடந்த 15-ம் தேதி ஈரோடு வந்தனர். இவர்கள் உள்ளூர் போலீசாருடன் தேர்தல் சம்பந்தமான பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.தேர்தல் பாதுகாப்பு பணிக்கு 5 கம்பெனி துணை ராணுவ வீரர்கள் வீரர்கள் வர உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். அதன்படி ஈரோடு கிழக்கு தொகுதியில் தற்போது வரை 3 கம்பெனி துணை ராணுவ வீரர்கள் வந்துள்ளனர். ஒரு கம்பெனியில் 90 துணை ராணுவத்தினர் உள்ளனர். 260 துணை ராணுவத்தினர் பல்வேறு தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மாநகராட்சி அலுவலகத்தில் இன்று முதல் துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதைப்போல் கிழக்கு பகுதி தேர்தலை ஒட்டி ஈரோடு கிழக்கு தொகுதியில் உள்ள 12 இடங்களில் தற்காலிக சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு போலீசார் உடன் இந்த துணை ராணுவத்தினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் ஏற்கனவே ஈரோடு கிழக்கு தொகுதியில் பல்வேறு இடங்களில் துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு நடத்தினர். மேலும் கிழக்கு தொகுதி தேர்தலில் பதற்றமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்டுள்ள 9 வாக்கு சாவடி மையங்களில் துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இந்நிலையில் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக வரும் 2-ந் தேதி மேலும் 2 துணை பாதுகாப்பு படையினர் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வருகை தர உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Next Story