இருசக்கர வாகனம் திருட்டு

இருசக்கர வாகனம் திருட்டு
X
ஈரோடு தினசரி காய்கறி சந்தையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த இரு சக்கர வாகனத்தை மர்ம நபர் திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
ஈரோடு நேதாஜி தினசரி காய்கறி சந்தையில் 300 க்கும் மேற்பட்ட கடைகள் இயங்கி வருகின்றன. இங்கு நாள்தோறும் தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா ,கேரளா ,ஆந்திரா, மஹராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் காய்கறிகள் வரத்தாகி அதனை ஈரோடு மாவட்டத்தின் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த வந்து வாங்கி சென்று விற்பனை செய்து வருகின்றனர். இந்த நிலையில் காய்கறி சந்தையில் கடை நடத்தி வரும் சஞ்சய் சொக்கலிங்கம் என்பவர் வழக்கம் போல தனது இரு சக்கர வாகனத்தினை நிறுத்திவிட்டு கடையில் வியாபாரத்தை சென்று உள்ளார்.அப்போது நள்ளிரவு சுமார் மூன்று மணி அளவில் மர்ம நபர் ஒருவர் இரு சக்கர வாகனத்தை திருடி சென்று உள்ளார்.இச்சம்பவம் குறித்து சஞ்சய் சொக்கலிங்கம் வடக்கு காவல் நிலையத்தில் சிசிடிவி காட்சிகள் உள்ள ஆதராங்களுடன் புகார் அளித்தார். புகாரை தொடர்ந்து மர்ம நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த நிலையில் மர்ம நபர் இரு சக்கர வாகனத்தினை திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது இதே போல காய்கறி சந்தைக்கு வரும் இரு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் அடிக்கடி திருட்டு போவதாகவும் போலீசார் ரோந்து பணிகளை தீவிர படுத்த வேண்டும் எனவும் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்...
Next Story