ஜெயங்கொண்டத்தில், மாநில அளவிலான அடைவு தேர்வு குறித்த பயிற்சி

X
அரியலூர், ஜன.31- மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் மூலமாக அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க ,நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் மூன்றாம் வகுப்பு ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மாநில அளவிலான அடைப்பு திறன் தேர்வு வருகின்ற பிப்ரவரி 4,5 மற்றும் 6 ந்தேதிகளில் நடைபெற உள்ளது. தேர்வினை நடத்துவதற்கு ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மூன்றாம் ஆண்டு மாணவர்களும், மகிமைபுரம் மாடர்ன் அரசு மற்றும் கலை கல்லூரி முதுகலை பிரிவு இரண்டாம் ஆண்டு மாணவர்களும் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு ஜெயங்கொண்ட அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சியினை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதுநிலை விரிவுரையாளர் வானதி தலைமையேற்று துவக்கி வைத்தார். வட்டார வளமைய மேற்பார்வையாளர் கண்ணதாசன் அனைவரையும் வரவேற்று பேசினார். ஆசிரியர் பயிற்றுநர்கள் குறிஞ்சி தேவி, சுகன்யா , கார்த்திகேயன் மற்றும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உதவி விரிவுரையாளர் ராஜேந்திரன், ஆகியோர் முன்னிலை வகித்து பயிற்சியினை வழங்கினார். பயிற்சியில் 117 மாணவர்கள் கலந்து கொண்டு தேர்வு நடத்துவதற்கான வழிமுறைகள் குறித்து தெளிவு பெற்றனர். ஆசிரியர் பயிற்றுநர்கள் அந்தோணி சேவியர், சரவணன் ,இளையராஜா செந்தில், டேவிட் ஆரோக்கிய ராஜ் ஆகியோர் பயிற்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
Next Story

