திண்டிவனத்தில் வழக்கறிஞர் அலுவலக பூட்டை உடைத்து திருட்டு

X
திண்டிவனம் காந்தி நகரைச் சேர்ந்தவர் கிருபாகரன்,59; வழக்கறிஞர். இவரது அலுவலகம் அதே பகுதியில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு 9:௦௦ மணிக்கு அலுவலகத்தை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார்.அவரது ஜூனியர் முத்துக்குமரன் நேற்று காலை 9:௦௦ மணிக்கு அலுவலகத்திற்கு சென்றபோது, முன்பக்க கேட்டின் பூட்டு உடைந்திருந்தது. உள்ளே சென்று பார்த்த போது அலுவலகத்தில் இருந்த இரண்டு பீரோக்கள் உடைந்து கிடந்தது. அதில் இருந்த ரூ.10 ஆயிரம் ரொக்கம் திருடு போயிருந்தது.இதுகுறித்து கிருபாகரன் கொடுத்த புகாரின்பேரில் திண்டிவனம் டவுன் போலீசார் வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனர்.
Next Story

