ஸ்ரீவில்லிபுத்தூரில் சாலை பாதுகாப்பு வார விழா இறுதி நாளான இன்று விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது....*

X
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் சாலை பாதுகாப்பு வார விழா இறுதி நாளான இன்று விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது.... விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் சாலை பாதுகாப்பு வாரத்தின் இறுதி நாளான இன்று சாலையில் பாதுகாப்பு பின்பற்றுவதை வலியுறுத்தி விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது. வருடம் தோறும் சாலையில் பயணம் செய்யும் இரு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகளின் நலன் கருதி சாலை பாதுகாப்பு வார விழா ஒரு வாரம் நடைபெறும். தற்போது சாலை விபத்துகள் அதிகமாக நடைபெறுவதால் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த வருடம் 30 நாட்கள் நாட்கள் சாலை பாதுகாப்பு வார விழா கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு கடந்த 30 நாட்களாக நாடு முழுவதும் கலை நிகழ்ச்சி, ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் அணிந்து செல்பவர்களுக்கு இனிப்புகள் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு வகைகளில் சாலையில் பயணிக்கும் போது விபத்து ஏற்படாமல் தடுப்பதற்காக பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. சாலை பாதுகாப்பு வாரத்தின் இறுதி நாளான இன்று ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையம் அருகே புயல் கலைக்குழு சார்பில் பொதுமக்களுக்கான விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.வட்டார போக்குவரத்து அலுவலர் சந்திரசேகர், ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் மன்ற தலைவர் ரவிக்கண்ணன், ஸ்ரீவில்லிபுத்தூர் காவல்துறை கண்காணிப்பாளர் ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டு ஹெல்மெட் அணிந்து சென்ற வாகன ஓட்டிகளுக்கு மரக்கன்றுகளை வழங்கி அவர்களுக்கு சாலை பாதுகாப்பு விதிகள் அடங்கிய பிரசுரங்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story

