குறுக்கு வழியில் அனுமதி பெற்றதால் சிப்காட்டுக்கு குட்டு வைத்த பசுமை தீர்ப்பாயம்

குறுக்கு வழியில் அனுமதி பெற்றதால் சிப்காட்டுக்கு குட்டு வைத்த பசுமை தீர்ப்பாயம்
X
குறுக்கு வழியில் அனுமதி பெற்றதால் சிப்காட்டுக்கு குட்டு வைத்த பசுமை தீர்ப்பாயம்
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தாலுகாவுக்கு உட் பட்ட சூரப்பூண்டி, வாணியமல்லி உள்ளிட்ட பகுதிகளில் தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் (சிப்காட்)தொழிற் பூங்கா அமைக்கதிட்டமிட்டிருந்தது. இதற்கான சுற்றுச்சூழல் அனுமதியை தமிழ்நாடு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் இருந்து சிப்காட் நிறுவனம் 22.4.2024 அன்று பெற்றது. பொதுமக்களின் கருத்து கேட்பு கூட்டத்தை நடத்தாமல் சுற்றுச்சூழல் அனுமதியை சிப்காட் நிறுவனம் பெற்றுவிட்ட தாக குற்றம்சாட்டப்பட்டது. இதைத்தொடர்ந்து சுற்றுச்சூழல் அனுமதியை எதிர்த்து சூரப்பூண்டி, வாணியமல்லி பகுதிகளை சேர்ந்த பிரவீனா, ஜெகன் குமார், ரஞ்சித் குமார், சுப்பிரமணி, பாலசுப்பிரம ணியம், பாலாஜிடில்லி, ஏழுமலை ஆகியோர் தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், ஒட்டுமொத்த சுற் றுச்சூழல் தாக்கம் குறித்த ஆய்வை மேற்கொள்ளாமல் சூரப் பூண்டி, வாணியமல்லி உள்ளிட்ட பகுதிகளில் சிப்காட் திட் டத்திற்கு வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதியை மறு பரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும் எனக்கூறி அந்த அனும தியை நிறுத்தி வைத்து உத்தரவிட்டனர்.
Next Story