வருவாய்த்துறை அலுவலர்களுடனான பணித்திறன் ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன். தலைமையில் நடைபெற்றது

வருவாய்த்துறை அலுவலர்களுடனான பணித்திறன் ஆய்வுக்கூட்டம்   மாவட்ட ஆட்சித்தலைவர்                                ஜெயசீலன். தலைமையில் நடைபெற்றது
X
வருவாய்த்துறை அலுவலர்களுடனான பணித்திறன் ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன். தலைமையில் நடைபெற்றது.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் வருவாய்த்துறை அலுவலர்களுடனான டிசம்பர்; - 2024 மாதத்திற்கான பணித்திறன் ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், சிறப்பாக பணியாற்றிய சிறந்த வருவாய் வட்டாட்சியர்களில், இராஜபாளையம் வருவாய் வட்டாட்சியர் திரு.இரா.இராமசுப்பிரமணியன் அவர்களுக்கு முதல் பரிசும், சாத்தூர் வருவாய் வட்டாட்சியர் திரு.தி.ராமநாதன் அவர்களுக்கு இரண்டாம் பரிசும், வெம்பக்கோட்டை வருவாய் வட்டாட்சியர் ந.கலைவாணி, சிறப்பாக பணியாற்றிய சிறந்த தனி வட்டாட்சியர் (ச.பா.தி) களில் இராஜபாளையம் தனி வட்டாட்சியர் (ச.பா.தி) திரு.பா.பாலகிருஷ்ணன் அவர்களுக்கு முதல் பரிசும், சாத்தூர் தனி வட்டாட்சியர் (ச.பா.தி) திருமதி சீ.உமா அவர்களுக்கு இரண்டாம் பரிசும், வெம்பக்கோட்டை தனி வட்டாட்சியர் (ச.பா.தி) திருமதி வீ.கிருஷ்ணவேணி அவர்களுக்கு மூன்றாம் பரிசும், சிறப்பாக பணியாற்றிய தனி வட்டாட்சியர் (கு.பொ.வ)ஃ வட்ட வழங்கல் அலுவலர்களில் இராஜபாளையம் தனிவட்டாட்சியர் (கு.பொ.வ.) திரு.மு.வடிவேல் அவர்களுக்கு முதல் பரிசும், அருப்புக்கோட்டை வட்ட வழங்கல் அலுவலர் திரு.தெ.அறிவழகன் அவர்களுக்கு இரண்டாம் பரிசும், விருதுநகர் வட்ட வழங்கல் அலுவலர் திரு.செ.பாஸ்கரன் அவர்களுக்கு மூன்றாம் பரிசும், முழுப்புலம் பட்டா மாறுதல் மனுக்களை அதிகளவில் ஏற்பளிப்பு செய்த மண்டல துணை வட்டாட்சியர்களில் திருச்சுழி மண்டல துணை வட்டாட்சியர் திரு.சி.சிங்கராஜ் அவர்களுக்கு முதல் பரிசும், அருப்புக்கோட்டை மண்டல துணை வட்டாட்சியர்-1 திரு.ஆ.பிரின்ஸ் ரஞ்சித்சிங் அவர்களுக்கும், அருப்புக்கோட்டை மண்டல துணை வட்டாட்சியர்-2 திருமதி சி.பானுமதி அவர்களுக்கும் இரண்டாம் பரிசும், வெம்பக்கோட்டை மண்டல துணை வட்டாட்சியர் திரு.தே.சுப்பிரமணியன் அவர்களுக்கு மூன்றாம் பரிசும், உட்பிரிவு பட்டா மாறுதல் மனுக்களை அதிகளவில் ஏற்பளிப்பு செய்த வட்டத் துணை ஆய்வாளர்களில் திருச்சுழி வட்டத்துணை ஆய்வாளர் திரு.பாலச்சந்திரன் அவர்களுக்கு முதல் பரிசும், வத்திராயிருப்பு வட்டத்துணை ஆய்வாளர் திருமதி.பெ.செல்வி அவர்களுக்கு இரண்டாம் பரிசும், சாத்தூர் வட்டத்துணை ஆய்வாளர் திரு.மாரிமுத்து அவர்களுக்கு மூன்றாம் பரிசும், சிறந்த தனி வருவாய் ஆய்வாளர்களில் (கு.பொ.வ.) அருப்புக்கோட்டை வட்டம் தனி வருவாய் ஆய்வாளர் (கு.பொ.வ.) திரு.சு.சசிகுமார் அவர்களுக்கு முதல் பரிசும், சிவகாசி வட்டம் தனி வருவாய் ஆய்வாளர் (கு.பொ.வ.) திரு.மா.கோட்டைராஜ் அவர்களுக்கு இரண்டாம் பரிசும், இராஜபாளையம் வட்டம் தனி வருவாய் ஆய்வாளர் (கு.பொ.வ.) திரு.கே.பாலமணிகண்டன் அவர்களுக்கு மூன்றாம் பரிசினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார். முன்னதாக, சிவகாசியில் நடைபெற்ற “சுவையுடன் சிவகாசி” உணவுத்திருவிழா மிக சிறப்பாக நடைபெற்றதை பாராட்டி சிவகாசி சார் ஆட்சியர் திருமதி ந.ப்ரியா ரவிச்சந்திரன் , விருதுநகரில் நடைபெற்ற “விருந்துடன் விருதுநகர் கார்னிவல் -2025” உணவுத்திருவிழா மிக சிறப்பாக நடைபெற்றதை பாராட்டி சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் திரு.மு.சிவகுமார் அவர்களுக்கும் பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் வழங்கினார்.
Next Story