மரங்கள் வெட்டிய மர்ம நபர்கள்

X
Komarapalayam King 24x7 |31 Jan 2025 7:27 PM ISTகுமாரபாளையத்தில் மரம் வெட்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி பொதுமக்கள் கொரிக்கும் விடுத்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், சின்னப்பநாயக்கன்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி சாலையில் பல மரங்களை மர்ம நபர்கள் வெட்டியுள்ளனர். இந்த மரங்களை வைத்து, தண்ணீர் ஊற்றி பராமரிப்பு செய்து வந்த அப்பகுதி பொதுமக்கள், மரங்களை வெட்டியது கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து தே.மு.தி.க. மாவட்ட பொருளர் மகாலிங்கம் கூறியதாவது: நானும், இப்பகுதி பொதுமக்கள் பலரும் சேர்ந்து இப்பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட மரங்களை நட்டு வைத்து தண்ணீர் ஊற்றி பராமரிப்பு செய்து வந்தோம். இன்று காலை வந்து பார்த்த போது, பல மரங்களை அடியோடு வெட்டி சாய்த்துள்ளனர். இதனை செய்த மர்ம நபர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மரங்களின் அவசியம் உணராத இவர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கை, அடுத்து, மரங்களை வெட்ட வரும் நபர்களுக்கு பாடமாக இருக்க வேண்டும்.
Next Story
