கணியலாம்பட்டியில் கரூர் மாவட்ட மதுவிலக்குலஸ் அமலாக்கத்துறை சார்பில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது

கணியலாம்பட்டியில் கரூர் மாவட்ட மதுவிலக்குலஸ் அமலாக்கத்துறை சார்பில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது
கரூர் மாவட்டம் - ஜனவரி - 31.01.2025 கணியலாம்பட்டியில் கரூர் மாவட்ட மதுவிலக்குலஸ் அமலாக்கத்துறை சார்பில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது கரூர் மாவட்டம், குளித்தலை பேருந்து நிலையத்தில் கரூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கு பிரிவு சார்பில் போதை பொருளை ஒழிப்போம் மனித மாண்பைக் காப்போம் என்று விழிப்புணர்வு நிகழ்ச்சி இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ் கான் அப்துல்லா மற்றும் மதுவிலக்கு கூடுதல் காவல் உதவியாளர் ஜெயக்குமார் அவர்களின் உத்தரவின் பெயரில் நடைபெற்றது. மதுவிலக்கு காவல் ஆய்வாளர் ரஷ்யா சுரேஷ் மற்றும் உதவி காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர் இதில் கணியலாம்பட்டி பொறியியல் கல்லூரில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடன கலைஞர்கள் பாட்டுப்பாடியும் நடனமாடியும் போதைப் பொருளை ஒழிக்க வேண்டும் என்று நிகழ்ச்சி நடைபெற்றது இதில் பேருந்து நிலையத்தில் உள்ள பொதுமக்களும் பள்ளி மாணவ மாணவிகளும் கலந்து கொண்டனர்.
Next Story