வணிக மேலாண்மைத்துறை சார்பாக மருதுபாண்டியர் கல்லூரியில் திறன் சார் போட்டிகள்

X
தஞ்சாவூர், மருதுபாண்டியர் கல்லூரியில் வணிகவியல் மற்றும் வணிக மேலாண்மைத்துறை மற்றும் இளங்கலை பாதுகாப்பு மற்றும் யுக்திகள் துறை சார்பாக, மாணவர்கள் தங்கள் திறனை வெளிக்காட்டும் போட்டிகள் டிரிக்ஸ்- 2025, வியாழக்கிழமை அன்று நடைபெற்றது. இவ்விழாவில், கல்வி நிறுவனங்களின் தலைவர் கொ.மருதுபாண்டியன் தலைமை வகித்தார், சிறப்பு விருந்தினராக திரைப்பட நடிகர் துரை.சுதாகரன், கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இவ்விழாவில், மருதுபாண்டியர் கல்லூரி முதல்வர் மா.விஜயா, கல்வியியல் கல்லூரி முதல்வர் ப.சுப்பிரமணியன், துணைமுதல்வர் ரா.தங்கராஜ், வணிக மேலாண்மை துறைத்தலைவர் வித்யா ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி வாழ்த்திப் பேசினர். முன்னதாக முதுநிலை மேலாண்மைத்துறை மாணவர் சந்தோஷ்குமார், வரவேற்றார். நிறைவாக இளங்கலை பாதுகாப்பு மற்றும் யுக்திகள் துறை மாணவி ரேணுகாதேவி நன்றி கூறினார். இவ்விழாவில் 15 க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இருந்து மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை கல்லூரி மேலாளர் இரா.கண்ணன், வணிகமேலாண்மைத் துறை பேராசிரியர்கள் செய்திருந்தனர்.
Next Story

