துணை முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் மருத்துவ முகாம்.

X
Paramathi Velur King 24x7 |31 Jan 2025 9:34 PM ISTதுணை முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் மருத்துவ முகாம் நடைபெற்றது.
பரமத்தி வேலூர்,ஜன.31: நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 48-வது பிறந்த பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நாமக்கல் மேற்கு மாவட்ட மருத்துவர் அணி மற்றும் விவேகானந்தா மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரி சார்பில் மாபெரும் இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. மருத்துவ முகாம் நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் மதுரா செந்தில் மற்றும் மாநில வர்த்தக அணிய துணைத் தலைவர் மூர்த்தி தலைமையில் மேலும் கண்ணன் மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர், பூபதி மேற்கு மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளர், முருகன் பேரூர் கழகச் செயலாளர், ராஜா வேலூர் பேரூராட்சி துறை தலைவர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மருத்துவ முகாமில் பொது மருத்துவம், எலும்பு மற்றும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை, கண் பார்வை மற்றும் இரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, இசிஜி, இருதய பரிசோதனை, உடல் பருமன் அளவு ஆகியவை இலவசமாக பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் பயனாளிகளுக்கு இலவசமாக மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது. முகாமில் சுற்றுவட்டார பகுதி சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். மேலும் முகாமில் தாலுகா, ஒன்றியம், பேரூர் கழக பொறுப்பாளர்கள், சார்பு அணி உறுப்பினர்கள், திமுக கவுன்சிலர்கள் கலந்து கொண்டு முகாம் ஏற்பாட்டினை செய்திருந்தனர்.
Next Story
