ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் ஏழு பேர் காயம்
Komarapalayam King 24x7 |1 Feb 2025 10:09 AM ISTகுமாரபாளையத்தில் ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் ஒன்பதாம் ஆண்டு ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி தொடக்கம் தொடங்கிய 50 நிமிடங்களில் 7 பேருக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதி
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள வளையகாரனூர் பகுதியில் குமாரபாளையம் ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் ஒன்பதாம் ஆண்டாக ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் சுகந்தி உறுதிமொழி வாசித்தும், தமிழக ஆதித் திராவிட நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் கொடி அசைத்தும் துவக்கி வைத்தார். இந்த ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் 600 காளைகளும் 400 மாடுபிடி வீரர்களும் கலந்து கொள்கின்றனர். நிகழ்ச்சிக்கு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நிகழ்ச்சி தொடங்கி 50 நிமிடங்களில் 7 வீரர்கள் மாடு முட்டியதில் காயம் ஏற்பட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Next Story


