திருப்பத்தூரில் தனியார் பள்ளி ஓட்டுனரின் அலட்சியத்தால் பேருந்து மோதி முதியவரின் இரு கால் பரிபோன பரிதாபம்! சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு*

X
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் தனியார் பள்ளி ஓட்டுனரின் அலட்சியத்தால் பேருந்து மோதி முதியவரின் இரு கால் பரிபோன பரிதாபம்! சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு* திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த அண்ணா நகர் பகுதியை சேர்ந்த ரவி (65) இவர் அண்ணா நகர் பகுதியில் உள்ள ரவுண்டானா அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். ஆண்டியப்பனூர் பகுதியை சேர்ந்த சந்தோஷ் என்பவர் ஆதியூர் பகுதியில் செயல்பட்டு வரும் விஜய் வித்யாலயா பள்ளியில் வாகன ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் இன்று மாலை பள்ளி முடிந்த பின் மாணவர்களை ஏற்றிக்கொண்டு அண்ணா நகர் பகுதி ரவுண்டானா அருகே வரும் பொழுது ஓட்டுனரின் அலட்சியத்தால் முதியவர் ரவியின் மீது மோதியதில் கீழே விழுந்தார். பின்னர் ரவியின் கால்கள் மீது பேருந்து ஏறி இறங்கியது. இதன் காரணமாக ரவியின் கால்கள் உடைந்து கதறி துடித்தார் இதனை அறிந்த அக்கம் பக்கம் திருப்பத்தூர் அரசு அனுப்பி வைத்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் முதியவருக்கு முதல் சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். முதியவர் மீது பள்ளி வாகனம் ஏரி இறங்கும் சிசிடிவி காட்சிகள் அருகே உள்ள கடையில் பொருத்தப்பட்டிருந்து சிசிடிவி-யில் பதிவாகியுள்ளன. மேலும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த சம்பவம் குறித்து திருப்பத்தூர் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் நடந்து சென்ற முதியவர் மீது தனியார் பள்ளி வாகனம் மோதி கால் உடைந்து சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
Next Story

