திருப்பத்தூர் நகராட்சியின் அலட்சியப் போக்கு பேருந்து நிலையத்தில் பள்ளத்தில் தவறி விழுந்து காயம் அடைந்த முதியவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி..

திருப்பத்தூர் நகராட்சியின் அலட்சியப் போக்கு பேருந்து நிலையத்தில் பள்ளத்தில் தவறி விழுந்து காயம் அடைந்த முதியவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி..
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சியின் அலட்சியப் போக்கு பேருந்து நிலையத்தில் பள்ளத்தில் தவறி விழுந்து காயம் அடைந்த முதியவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி.. திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சி உட்பட்ட பிரதான பேருந்து நிலையத்தில் ஆங்காங்கே குண்டும் குழியுமாக பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ஜோலார்பேட்டை அடுத்த இடயாம்பட்டி பகுதியைச் சேர்ந்த முருகேசன்(65) என்பவர் பேருந்து நிலையத்தில் உள்ள பள்ளத்தில் தவறி விழுந்ததில் முகத்தில் காயம் ஏற்பட்டுள்ளது. பின்னர் போலீசார் பொதுமக்கள் உதவியுடன் காயம் அடைந்த முதியவரை திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர் அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. திருப்பத்தூர் பேருந்து நிலையத்தில் அதிகளவில் கொண்டும் குழியுமாகவும் பள்ளமாகவும் இருந்து வருகிறது இது தொடர்பாக பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காத நிலையில் தற்போது முதியவர் ஒருவர் பள்ளத்தில் விழுந்து படுகாயம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது இது குறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story