பள்ளி வேன் மோதி மூதாட்டி உயிரிழப்பு

X
மேல்மலையனூர் அருகே ஆனைப்பாளையம் கிராமத்தில் இருந்து மாணவர்களை ஏற்றிக்கொண்டு அவலூர்பேட்டை நோக்கி தனியார் பள்ளி வேன் ஒன்று புறப்பட்டது.வேனை தேப்பிரம்பட்டு கிராமத்தை சேர்ந்த சண்முகம் மகன் சேகர் (38) என்பவர் ஓட்டினார்.இந்த வேன் அடுக்குபாசி கிராமத்தில் சென்றபோது எதிரே பஸ் ஒன்று வந்துள்ளது. அப்போது பஸ்சுக்கு வழிவிடுவதற்காக சேகர் வேனை பின்நோக்கி இயக்கியுள்ளார்.அந்தசமயத்தில் வேனுக்கு பின்னால் அதே கிராமத்தை சேர்ந்த பெரியப்பு மனைவி குட்டிமா (70) என்பவர் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக குட்டிமா மீதுவேன் மோதியது.இதில் பலத்த காயமடைந்த குட்டிமா சம்பவ. இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.இந்த விபத்து குறித்து அவலூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

