திண்டிவனம் அருகே ஸ்டுடியோவில் கேமரா பணம் திருட்டு

திண்டிவனம் அருகே ஸ்டுடியோவில் கேமரா பணம் திருட்டு
X
ஸ்டுடியோவில் கேமரா பணம் திருட்டு
திண்டிவனம் கிடங்கல்-2 பகுதியை சேர்ந்தவர் பக்தவேந்தன் மகன் விக்னேஷ் (வயது 29). திண்டிவனம் அடுத்த சாரம் வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகில் ஸ்டூடியோ மற்றும் இ-சேவை மையம் நடத்தி வருகிறார். இவர் கடந்த 29-ந்தேதி இரவு வழக்கம்போல் பணி முடிந்ததும் ஸ்டூடியோவை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார்.மறுநாள் காலையில் மீண்டும் வந்து பார்த்தபோது கடையின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. உள்ளே சென்றுபார்த்த போது அங்கு வைத்திருந்த ஒரு கேமரா மற்றும் ரூ.2,500 ரொக்கம் ஆகியவற்றை காணவில்லை.அதை யாரோ மர்மநபர் திருடிச்சென்றது தெரியவந்தது.இதுபற்றிய தகவல் அறிந்ததும் ஒலக்கூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து திருட்டு நடந்த ஸ்டூடியோவை பார்வையிட்டு அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து இதுகுறித்து விக்னேஷ் கொடுத்த புகாரின்பேரில் ஒலக்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர்.
Next Story