பள்ளி மற்றும் விளையாட்டு வீரர்கள் ஓய்வறை கட்டுமான அமைச்சர் சேகர்பாபு ஆய்வு

புழலில் வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பள்ளி மற்றும் விளையாட்டு வீரர்கள் ஓய்வறை கட்டுமான அமைச்சர் சேகர்பாபு ஆய்வு.
புழலில் வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பள்ளி மற்றும் விளையாட்டு வீரர்கள் ஓய்வறை கட்டுமான அமைச்சர் சேகர்பாபு ஆய்வு. கட்டுமான பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல். வடசென்னை என்பது இனி வளர்ந்த சென்னையாக மாறும் என நேற்று சென்னையில் ஆய்வு மேற்கொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் புழலில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகள் குறித்து அமைச்சர் சேகர்பாபு நேரில் ஆய்வு செய்து பணிகளை துரிதப்படுத்தினார். புழல் சென்னை மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் 11கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் வகுப்பறை கட்டுமான பணிகள் குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், சென்னை பெருநகர வளர்ச்சி குழும தலைவருமான சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டு அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இதே போல புழலில் 2கோடியே 75 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கால்பந்தாட்ட விளையாட்டு திடல் மேம்படுத்தும் பணிகளையும் அமைச்சர் ஆய்வு செய்தார். அவ்விடத்தில் விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வறை, விளையாட்டு பொருட்களுக்கான வைப்பறை கட்டுமான பணிகள் தொடர்பாக பார்வையிட்டு எஞ்சிய பணிகள் தொடர்பான வரைபடங்களுடன் அதிகாரிகள் எடுத்துரைத்தனர். கட்டுமான பணிகள் அனைத்தையும் விரைவாக முடித்து விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் அப்போது அறிவுறுத்தினார். அப்போது அங்கு வந்த விளையாட்டு வீரர்கள் பணிகள் முறையாக செய்வதில்லை என அமைச்சரிடம் முறையிட்ட போது இளைஞர் ஒருவர் தொடர்ந்து பேசி கொண்டிருந்ததால் ஆத்திரமடைந்த அமைச்சர் சேகர்பாபு தம்பி, நாங்களும் உன் வயதை கடந்து தான் இங்கு வந்துள்ளோம், பேசி கொண்டிருக்கும் போது ஏன் வீணாக கலகம் செய்கிறார் என மிரட்டி தொடர்ந்து பயிற்சியாளரிடம் பேசினார். விளையாட்டு மைதானத்தை முழுமையாக 2மாதங்கள் பயன்படுத்தாமல் ஒப்பந்ததாரரிடம் ஒப்படைக்குமாறு அப்போது விளையாட்டு வீரர்களுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார்.
Next Story