மூதாட்டியிடம் கத்தியை காட்டி மிரட்டி எட்டரை பவுன் தங்க நகையை பறித்துச் சென்ற குற்றச்சம்பவத்தில் பெண் உட்பட இருவரை கைது செய்து சிறையில் அடைத்த காவல்துறை...*

X
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம் கத்தியை காட்டி மிரட்டி எட்டரை பவுன் தங்க நகையை பறித்துச் சென்ற குற்றச்சம்பவத்தில் பெண் உட்பட இருவரை கைது செய்து சிறையில் அடைத்த காவல்துறை... விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி கிருஷ்ணன்கோவில் அருகே ராமச்சந்திராபுரம் பகுதியில் 83 வயது மூதாட்டி கமலா வசித்து வருகிறார்.இவர் வீட்டில் தனியாக இருந்த போது கத்தியை காட்டி மிரட்டி மர்மநபர் ஒருவர் கழுத்தில் அணிந்திருந்த நான்கரை பவுன் தங்க செயினையும் கையில் அணிந்திருந்த நான்கு பவுன் எடையுள்ள ஒரு ஜோடி வளையல்களையும் பறித்து சென்றுள்ளார். இந்த திருட்டு சம்பவம் குறித்து மூதாட்டி கமலாவின் மருமகன் குருசாமி என்பவர் கிருஷ்ணன் கோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தனிப்படைகள் அமைத்து குற்றவாளியை வலை வீசி தேடி வந்த நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி வயது 31 என்பவர் மூதாட்டியிடம் கத்தியை காட்டி மிரட்டி நகைகளை பறித்து சென்றது தெரிய வந்தது. திருடனை கைது செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டதில் மூதாட்டி வீட்டில் வேலை பார்க்கும் சந்திராகலா என்பவர் உடந்தையாக இருந்தது தெரிய வந்தது. இருவரையும் கைது செய்த காவல்துறையினர் இவர்களிடம் இருந்த எட்டரை பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்து ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Next Story

