யூபிஎஸ் பேட்டரி வெடித்து தீ விபத்து நிதியமைச்சர் தங்கம்தென்னரசு நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்

யூபிஎஸ் பேட்டரி வெடித்து தீ விபத்து  நிதியமைச்சர் தங்கம்தென்னரசு நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்
X
யூபிஎஸ் பேட்டரி வெடித்து தீ விபத்து ஏற்பட்டதில் அதிர்ஷ்டவசமாக குழந்தைகளுடன் உயிர் தப்பிய குடும்பத்தினரை தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம்தென்னரசு நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து நிவாரண உதவி வழங்கினார்*
திருச்சுழி அருகே வீட்டில் யூபிஎஸ் பேட்டரி வெடித்து தீ விபத்து ஏற்பட்டதில் அதிர்ஷ்டவசமாக குழந்தைகளுடன் உயிர் தப்பிய குடும்பத்தினரை தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம்தென்னரசு நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து நிவாரண உதவி வழங்கினார் விருதுநகர் மாவட்டம் ,திருச்சுழி அருகே அ.முக்குளம் ஆதிதிராவிடர் காலனியில் முருகன் என்பவர் தனது மனைவி, மகள் பேரக்குழந்தையுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 28ஆம் தேதி அவரது பசுமை வீட்டில் இருந்த யுபிஎஸ் பேட்டரி திடீரென்று வெடித்து சிதறியதில் தீப்பிடித்து எரிந்துள்ளது. உடனே மனைவி மகள், பேரக்குழந்தைகளை கூப்பிட்டு வீட்டிற்கு வெளியே சென்றுள்ளார். பின்னர் அங்கு எரிந்து கொண்டிருந்த தீயை அருகில் இருந்தவர்கள் உதவியுடன் நீண்ட நேரம் போராடி தீயை அனைத்துள்ளனர். வீட்டில் தீப்பிடித்ததில் ஃபேன், மிக்ஸி, போன்ற எலக்ட்ரானிக்கல் பொருட்கள், துணி, சோபா போன்றவை தீயில் எரிந்து கருகி சேதமானது. பேட்டரி வெடித்த சத்தத்தை கேட்ட முருகன் அதிர்ஷ்டவசமாக குடும்பத்தினரை வெளியேற்றி உயிர் தப்பினார். இந்த யுபிஎஸ் பேட்டரி வெடித்து தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் குறித்து தகவல் அறிந்த தமிழ்நாடு நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றுத்துறை அமைச்சர் தங்கம்தென்னரசு உடனே பாதிப்பு அடைந்த முருகன் வீட்டிற்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறி நிவாரண உதவியினை வழங்கினார். மேலும் சேதமடைந்த வீட்டிற்கு அரசு சார்பில் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.
Next Story