ஜெ.குரு பிறந்த நாளை முன்னிட்டு பாமக சார்பில் மரியாதை.

X
Paramathi Velur King 24x7 |1 Feb 2025 7:59 PM ISTஜெ.குரு பிறந்த நாளை முன்னிட்டு பாமக சார்பில் அவர் திருஉருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
பரமத்தி வேலூர்.பிப்.1: வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி ஜெ.குரு பிறந்த தினத்தை முன்னிட்டு நாமக்கல் மத்திய மாவட்டம் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கத்தின் சார்பாக ஜெ குரு திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி பரமத்தி வேலூர் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்டச் செயலாளர் வக்கீல் ரமேஷ் தலைமை வகித்தார். மாவட்டத் துணைச் செயலாளர் ஸ்ரீதர், மாவட்ட தேர்தல் பணி குழுச் செயலாளர் கதிர்வேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் மாவட்ட அமைப்பு துணை தலைவர் பாடிபில்டர் லோகு,மாவட்ட உழவர் பேரியக்க துணை தலைவர் சேகர்,மாவட்ட சமூக ஊடகப் பேரவை செயலாளர் ஸ்ரீதர், வேலூர் நகர செயலாளர் ஜெய்கணேஷ், பரமத்தி ஒன்றிய செயலாளர் சர்வேஸ்வரன், பேரூர் இளைஞரணி செயலாளர் வசந்த் உட்பட மாவட்ட,ஒன்றிய, நகர,பேரூர்,கிளை பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டு வன்னியர் சங்கத் தலைவர் ஜெ.குரு உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
Next Story
