தஞ்சாவூர் அருகே மாதாக்கோட்டையில் ஜல்லிக்கட்டுப் போட்டி 

தஞ்சாவூர் அருகே மாதாக்கோட்டையில் ஜல்லிக்கட்டுப் போட்டி 
X
ஜல்லிக்கட்டு
தஞ்சாவூர் மாவட்டம், மாதாக்கோட்டை ஊராட்சியில், ஜல்லிக்கட்டு விளையாட்டு போட்டியினை சட்டமன்ற உறுப்பினர்கள் துரை.சந்திரசேகரன் (திருவையாறு),  டி.கே.ஜி.நீலமேகம் (தஞ்சாவூர்)  ஆகியோர் சனிக்கிழமை கொடியசைத்து துவக்கி வைத்து பார்வையிட்டனர். தஞ்சாவூர் மாவட்டம், மாதாக்கோட்டை ஊராட்சியில் ஜல்லிக்கட்டு விளையாட்டு போட்டி சனிக்கிழமை நடைபெற்றது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் பல்வேறு ஊர்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது.  இதேபோல், தஞ்சாவூர் மாவட்டத்தில் இந்த ஆண்டுக்கான முதல் ஜல்லிக்கட்டு போட்டியானது  மாதாக்கோட்டை ஊராட்சியில் நடைபெற்றது. இப்போட்டியில் தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, சிவகங்கை போன்ற பல்வேறு மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான 700க்கும் மேற்பட்ட காளைகளும், 100க்கும் மேற்பட்ட  வீரர்களும் பங்கேற்றனர்.  மருத்துவப் பரிசோதனைக்கு பிறகே காளைகளும், வீரர்களும் களத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.  இப்போட்டியில் பங்கேற்ற சிறந்த வீரர்கள் மற்றும் காளைகளுக்கு பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன. முன்னதாக, தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் இலக்கியா தலைமையில் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா.இராஜாராம்,  டி.அருளானந்தசாமி, முத்துக்குமார் மற்றும் கால்நடைத்துறை வருவாய்த்துறை ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் ஆ.சவரிராஜ் மற்றும் அலுவலர்கள், ஏராளமான பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story