குறிஞ்சிப்பாடி: சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

X
குறிஞ்சிப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நல பணித் திட்டத்தின் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் இராஜவேல் தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியை கலைச்செல்வி முன்னிலை வகித்தார். முதுகலை ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி அனைவரையும் வரவேற்று பேசினார் சிறப்பு அழைப்பாளராக குறிஞ்சிப்பாடி காவல் நிலைய ஆய்வாளர் ராஜதாமரைப் பாண்டியன் கலந்து கொண்டு விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடக்கி வைத்தார்.
Next Story

