கடலூரில் பாஜக கண்டன ஆர்ப்பாட்டம்

X
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி தொகுதிக்குட்பட்ட பெத்தாங்கப்பம் , மலையடிகுப்பம், கொடுக்கன்பாளையம், வெள்ளக்கரை,கீரப்பாளையம் ஆகிய கிராமங்களுக்கு உட்பட்ட 165 ஏக்கர் விலை நிலங்களை கையகப்படுத்த முயன்ற திமுக அரசை கண்டித்து கடலூர் கிழக்கு மாவட்டம் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மாநில செயலாளர் அஸ்வத்தம்மன் தலைமையில் கடலூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. இதில் மாவட்ட தலைவர் அக்னி கிருஷ்ணமூர்த்தி மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
Next Story

