பாரதி ஜனதா கட்சியினர் மறைந்த முன்னாள் எம்எல்ஏவும், மாநில வன்னியர் சங்க தலைவருமான காடுவெட்டி குருவின் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

X
அரியலூர், பிப்.1- அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே காடுவெட்டியில் மறைந்த முன்னாள் எம்எல்ஏவும் மாநில வன்னியர் சங்க தலைவருமான ஜெ.குருவின் பிறந்தநாளை முன்னிட்டு வன்னியர் ஜெயந்தி நாளாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.அந்த வகையில் இந்த ஆண்டும் வன்னியர் ஜெயந்தி விழா மாவீரன் மஞ்சள் படை அமைப்பின் சார்பில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இதில் ஜெ.குருவிற்கு திருவுருவ சிலை திறப்பு விழா நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகள் பலரும் குருவின் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.அந்த வகையில் பாரதிய ஜனதா கட்சி மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் இராம.சீனிவாசன் மாநில செயலாளர் அஸ்வத்தாமன் மற்றும் அரியலூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் டாக்டர் பரமேஸ்வரி உள்ளிட்ட பாஜக நிர்வாகிகளுடன் சென்று குருவின் திரு உருவ சிலை மற்றும் திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். .
Next Story

