தஞ்சாவூர் மாவட்ட சிறப்புத்திட்ட செயலாக்கத் துறை கண்காணிப்பு அலகில் இளம் நெறிஞர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்

X
தஞ்சாவூர் மாவட்டத்தில், மாவட்ட சிறப்புத் திட்ட செயலாக்க அலகிற்காக இளம் நெறிஞர் (Young Professional) பணியிடத்திற்கு தற்காலிக அடிப்படையில் தொகுப்பூதியத்தில் பணியாற்ற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், திட்ட செயலாக்க அலகிற்காக மாவட்ட அளவில் பல்வேறு துறைகளில் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்கள் குறித்த விரிவான ஆய்வு மற்றும் தரமான தரவுகளை ஆய்வு செய்தல், ஆய்வுகளின் அடிப்படையில் விளக்க காட்சிகள், கொள்கை விளக்கங்களை உருவாக்குதல் ஆகிய நோக்கங்களை நிறைவேற்றும் விதமாக இளம் நெறிஞர் (Young Professional) பணிக்கு காலிப்பணியிடம் உள்ளது. இதில், பணியாற்றிட கணிணி அறிவியல் /தகவல் தொழில்நுட்பத்தில் இளங்கலை பொறியியல் அல்லது தரவு அறிவியல் (Data Science) மற்றும் புள்ளிஇயல் படிப்பில் இளங்கலை பட்டம் (நான்கு ஆண்டு படிப்பு) அல்லது தொடர்புடைய படிப்பில் முதுகலை பட்டம் படித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு மாநில அரசின் பணியாளர் தேர்வு விதிமுறையின் அடிப்படையில் இளம் நெறிஞர்(Young Professional) நியமனம் நடைபெறும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார். மேற்படி நியமனத்திற்கு தகுதியுள்ள இளம் நெறிஞருக்கு மாதாந்திர தொகுப்பூதியம் ரூ.50 ஆயிரம் மட்டும் வழங்கப்படும். தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் ஒரு 05.02.2025 அன்று மாலை 05.00 மணிக்குள் தங்கள் சுய விவரங்கள் அடங்கிய விண்ணப்ப படிவத்தினை முழுமையாக பூர்த்திசெய்து மாவட்ட புள்ளி இயல் துணை இயக்குநர், மாவட்ட புள்ளி இயல் அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் தஞ்சாவூர் -613010 என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூயலமாக அனுப்பலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும், அறிவிக்கை மற்றும் விண்ணப்ப படிவம் ஆகியவற்றை thanjavur.nic.in என்ற இணையதளவழியாக பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்" என்றார்.
Next Story

