காடுவெட்டி குருவின் சிலைக்கு போக்குவரத்து துறை அமைச்சர் ஜெயங்கொண்டம் எம் எல் ஏ மாலை அணிவித்து மரியாதை

காடுவெட்டி குருவின் சிலைக்கு போக்குவரத்து துறை அமைச்சர் ஜெயங்கொண்டம் எம் எல் ஏ மாலை அணிவித்து மரியாதை
X
காடுவெட்டி குருவின் சிலைக்கு போக்குவரத்து துறை அமைச்சர் மற்றும் ஜெயங்கொண்டம் எம்எல்ஏ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இன்று (01-02-2025) சனிக்கிழமை நண்பகல்,ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி,ஜெயங்கொண்டம் ஒன்றியம், காடுவெட்டியில்,மறைந்த வன்னியர் சங்கத் தலைவர்,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாவீரன் ஜெ.குரு அவர்களின் 64-வது பிறந்தநாளை முன்னிட்டு,மாவீரன் மஞ்சள் படை தலைவர் குரு.கனலரசன் அவர்களின் ஏற்பாட்டில் அமைக்கப்பட்டுள்ள,மாவீரன் ஜெ.குரு அவர்களின் முழு திருவுருவ வெண்கல சிலைக்கு,மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் அவர்களுடன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினோம். இந்நிகழ்வில் சட்டதிட்ட திருத்தக்குழு இணைச்செயலாளர் சுபா.சந்திரசேகர், ஜெயங்கொண்டம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் இரா.மணிமாறன், ஜெயங்கொண்ட நகர கழகச் செயலாளர் வெ.கொ.கருணாநிதி,ஆண்டிமடம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் ஆர்.கலியபெருமாள் மற்றும் கழக தோழர்கள் கலந்துகொண்டனர்.
Next Story