ஜெ .குருபிறந்தநாள் விழா
பெரம்பலூரில் பாமக சார்பில் முன்னாள் வன்னியர் சங்கத் தலைவர் ஜெ .குருபிறந்தநாள் விழா இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. பெரம்பலூர் மாவட்டத்தில் பாமக சார்பில் முன்னாள் வன்னியர் சங்க தலைவரும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினருமான ஜெ குருவின் 64வது பிறந்தநாள் முன்னிட்டு மாவட்ட செயலாளர் செந்தில்குமார் தலைமையில் பொதுக்குழு உறுப்பினர் அனுக்கூர் ராஜேந்திரன், வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன், வன்னியர் சங்க மாவட்ட தலைவர் வரதராஜ் அமைப்பு தலைவர் மருத வேல் .வழக்கறிஞர் தங்கதுரை, மாவட்ட துணை செயலாளர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலையில் மாவீரன் ஜெ குருவிற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது இதில் இளைஞர் அணி மாவட்ட தலைவர் செல்வகுமார் ஒன்றிய செயலாளர்கள் சீனிவாசன் ,ரமேஷ், பிரபு,நகர செயலாளர் இமயவரம்பன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்
Next Story




