ராமநாதபுரம் மாணவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது

ராமநாதபுரம் கலை பண்பாட்டு துறை மாணவர்களுக்கு ரயில் நிலையத்தில் மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது
ராமநாதபுரம் கலை பண்பாட்டு துறை மாணவர்களுக்கு ரயில் நிலையத்தில் மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது புதுடெல்லி ஜனவரி 26 ல் 76-வது குடியரசு தினவிழா மத்திய கலைபண்பாட்டுத் துறை புதுடெல்லி சங்கீத் நாடக அகாடமி சார்பாக 60 கரகாட்ட கலைஞர்கள் குடியரசு தினவிழாவில் கலைநிகழ்ச்சிகள் நிகழ்த்தினார்கள். இதில் கலைபண்பாட்டுத் துறை இராமநாதபுரம் மாவட்ட பகுதிநேர நாட்டுப்புற கலைப் பயிற்சி மாணவர்கள் ஜெயஸ்ரீ நர்சிங் மாணவி ஹரிஸ்ராகுல் கூட்டுறவு பட்டயபடிப்பு மாணவர் லோ.ஆகாஷ் பரமக்குடி அரசு கலைக் கல்லூரி முன்றாம் ஆண்டு இயற்பியல் மாணவர் ஆகியோர்கள் 28.12.2024-ம் தேதி முதல் பயிற்சி எடுத்து நிறைவாக 26.01.2025ம் ராஜாபாத்பாரத பிரதமர் குடியரசு தலைவர் முன்பாக இந்தியா கேட் வாயிலில் இந்தியாவில் அனைத்து மாநில நாட்டுப்புற கலைஞர்கள் 5000 கலைஞர்களுடன் தமிழ்நாட்டின் பாரம்பரியத்தை பறைசாற்றும் கரகாட்டம் நிகழ்ச்சியை நிகழ்த்தியுள்ளார்கள் நிகழ்ச்சியை சிறப்பாக முடித்துவிட்டு இராமநாதபுரம் ரயில் நிலையத்திற்கு வருகை புரிந்தவர்களை சிலம்பாட்டம் ஒயிலாட்டம் ஆடி பாடி வரவேற்கப்பட்டது. இதில் பெற்றோர்கள் கலைஞர்கள் மாணவ மாணவிகள் உறவினர்கள் கலந்து கொண்டு சிறப்பாக வரவேற்றனர் ஜெயஸ்ரீ என்ற மாணவியை பேராவூர் கிராம பொதுமக்கள் மாலை அனிவித்து சிறப்பாக வரவேற்றனர்
Next Story