ரயில் நிலையத்தில் லேப்டாப் தவறவிட்ட பெண்; போலீஸ் ஒப்படைத்தது

ரயில் நிலையத்தில் லேப்டாப் தவறவிட்ட பெண்; போலீஸ் ஒப்படைத்தது
X
நாகர்கோவில்
சென்னையில் ஐ டி நிறுவனத்தில் பணியாற்றி வருபவர் மேனகா (42). இவரது சொந்த ஊர் மார்த்தாண்டம். நேற்று முன்தினம்  மாலை  சென்னை - கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலில் அவர் நாகர்கோவில் புறப்பட்டார். நேற்று காலை நாகர்கோவில் வந்து இறங்கினார். பின்னர் பஸ்ஸுக்காக நடந்து சென்றவர் தனது பை ஒன்றை ரயில் நிலைய ஆட்டோ நிலைய பகுதியில் தவறவிட்டார்.  அதில் லேப்டாப் உள்ளிட்ட பொருட்கள் இருந்தன.        உடனடியாக ரயில்வே போலீசாரிடம் மேனகா புகார் செய்தார்.  எஸ்ஐ குருநாதன் மற்றும் போலீசார் ரயில் நிலையத்தில் அந்த பெண்ணை அழைத்து சென்று தேடினர்.  கடைசியில் ஆட்டோ நிலையம் வந்து பார்த்தபோது அவர் பைக்கில் வைத்து விட்டு சென்ற பை அப்படியே இருந்தது. அதை மீட்டு போலீசார் லேப்டாப் உள்ளிட்ட  பொருட்களை சரிபார்த்து ஒப்படைத்தனர்
Next Story