நாகை மாவட்டத்தில் வழக்கத்திற்கு மாறாக நிலவும் மூடுபனி
நாகை மாவட்டத்தில், நேற்று காலை கடும் பனிப்பொழிவு காணப்பட்டது. வழக்கமாக, ஆண்டுதோறும் டிசம்பர் மாத இறுதியில், மூடுபனி நிலவுவது வழக்கம். வழக்கத்திற்கு மாறாக, நேற்று காலை அதிக மூடுபனி நிலவுகிறது. பருவநிலையில் ஏற்பட்ட மாற்றமா என்று பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். பருவம் தவறிய பனிப்பொழிவு காரணமாக, நெற்பயிர்களுக்கு இலைப்பேன் நோய் மற்றும் பயிர்கள் மஞ்சள் நிறமாக மாறும் நோய் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. மூடுபனி நிலவுவதால், சாலைகளில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் இருக்கும் நிலையில், வாகனங்கள் முகப்பு விளக்கை எரிய விட்டபடி சென்றன. நாகப்பட்டினம், வேளாங்கண்ணி,திருக்குவளை, காக்கழனி, சிகார், ஆந்தகுடி, சாட்டியக்குடி, வலிவலம், சுந்தரபாண்டியன், கொடியாலத்தூர், கீரங்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் பனிப்பொழிவு அதிகரித்து காணப்பட்டது.
Next Story





