நித்திரவிளையில் வேலை வாங்கித் தருவதாக மோசடி

X
குமரி மாவட்டம் நித்திரவிளை அருகே நடைக்காவு பகுதியை சேர்ந்தவர் சோமன் (60). கூலி தொழிலாளி. புதுக்கடை அருகேயுள்ள முஞ்சிறை பகுதியை சேர்ந்தவர் பிரதீப் விஜயன் (33). இவர் தற்போது நடைக்காவு பகுதியில் வசித்து வருகிறார். இதன் காரணமாக இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது பிரதீப் விஜயன் தனக்கு அரசியல் செல்வாக்கு உள்ளவர்களை நன்றாக தெரியும் எனக் கூறி சோமனின் மூத்த மகளுக்கு தாலுகா அலுவலகத்தில் கிளார்க் வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளார். அதற்கென்று மூன்று லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் பெற்றுள்ளார். ஆனால் சொன்னது போல் வேலை வாங்கி கொடுக்கவில்லை. பணத்தையும் திரும்ப கொடுக்கவில்லை என தெரிகிறது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சோமன் குழித்துறை நீதிமன்றம் எண் - 2 -ல் புகார் செய்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் நித்திரவிளை போலீசார் விசாரிக்க உத்தரவிட்டது. இதை எடுத்து நித்திரவிளை போலீசார் பிரதீப் விஜயன் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story

