நாகர்கோவில் ரயில்வே பெண் போலீசுக்கான ஓய்வறை திறப்பு

நாகர்கோவில் ரயில்வே பெண் போலீசுக்கான ஓய்வறை திறப்பு
X
குமரி
ரயில்வே பாதுகாப்பு படையின் ஐஜி ஈஸ்வர ராவ் நேற்று கன்னியாகுமரி வந்தார். முதலில் கன்னியாகுமரி ரயில் நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள்  தொடர்பாக ஆய்வு செய்தார். பின்னர் நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் உள்ள ரயில்வே பாதுகாப்பு படை காவல் நிலையத்திற்கு வந்தார்.       அங்கு காவல் நிலைய மேல் மாடியில் பெண் போலீசருக்கான ஓய்வு அறை புதிதாக கட்டப்பட்டுள்ளது. அதை  ஐஜி ஈஸ்வரராவ் திறந்து வைத்தார். பின்னர் அரங்கில் ரயில்வே பாதுகாப்பு ஆலோசனை மேற்கொண்டார். அப்போது குமரி மாவட்டம் சர்வதேச சுற்றுலா தலமாகும். பல நாடுகள், மாநிலங்களை சேர்ந்தவர்கள் இங்கு வருவதால் ரயில் பயணிகளுக்கு போதிய பாதுகாப்பை உறுதி செய்யப்பட வேண்டும் என அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது திருவனந்தபுரம் கோட்ட ரயில்வே பாதுகாப்பு படை ஆணையாளர் தன்வி, உதவியாளர் சாம்நாத், நாகர்கோவில் ரயில்வே பாதுகாப்பு இன்ஸ்பெக்டர் முகேஷ் சாந்தமீனா உட்பட கலந்து கொண்டனர்.
Next Story