தேர்தல் விதி மீறல்

தேர்தல் விதி மீறல்
X
தேர்தல் விதிமீறல் மேடை அமைத்தல் மற்றும் அதிகாரிகளை பணி செய்யாமல் தடுத்தல் சீமான் கட்சியில் மீது வழக்கு பதிவு
ஈரோட்டில் தேர்தல் விதிகளை மீறி மேடை அமைத்தும், அரசு அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்த சீமான் உட்பட நாம் தமிழர் கட்சியினர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற 5ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஈரோட்டில் தொடர் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இதில், தேர்தல் விதிகளை மீறியும், அனுமதி பெறாமல் பிரசாரம் செய்ததாக ஏற்கனவே வேட்பாளர் சீதாலட்சுமி மற்றும் சீமான், கட்சியினர் மீது 11க்கும் மேற்பட்ட வழக்குகளை போலீசார் பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், ஈரோடு மரப்பாலம் அருகே முனிசிபல் சத்திரம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு நாம் தமிழர் கட்சியினர் தெருமுனை கூட்டத்திற்கு அனுமதி பெற்றிருந்தனர். ஆனால், பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் தேர்தல் விதிகளை மீறி மேடை அமைத்து பிரசாரத்தில் ஈடுபட்டனா். தேர்தல் பறக்கும் படை அதிகாரி ஜெகநாதன் கட்சியினரிடம் அறிவுறுத்தியும், தொடர்ந்து அவரை பணி செய்ய விடாமல் தடுத்தனர். இதுகுறித்து பறக்கும் படை அதிகாரி ஜெகநாதன் ஈரோடு தெற்கு போலீசில் அளித்த புகாரின்பேரில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், வேட்பாளர் சீதாலட்சுமி, சாட்டை துரைமுருகன் உள்ளிட்ட கட்சியினர் 7 பேர் மீது அரசு அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்தல், தேர்தல் விதிகளை மீறியது உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Next Story