மாவட்ட நீதிமன்றத்தில்புகைப்படக் கண்காட்சி

மாவட்ட நீதிமன்றத்தில்புகைப்படக் கண்காட்சி
X
நீதிமன்றத்தில்புகைப்படக் கண்காட்சி
விழுப்புரம் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நடந்த கண்காட்சியை, மாவட்ட சட்டப்பணி ஆணை குழு தலைவர் நீதிபதி மணிமொழி துவக்கி வைத்தார். நீதிபதிகள் இளவரசன், வெங்கடேசன், ராஜசிம்மவர்மன், வினோதா, ரகுமான் முன்னிலை வகித்தனர். நீதிபதிகள் புஷ்பராணி, தமிழ்ச்செல்வன், வரலட்சுமி, தனம், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் ஜெயச்சந்திரன், மாஜிஸ்திரேட் ராதிகா மற்றும் வழக்கறிஞர்கள், நீதிமன்ற பணியாளர்கள் கலந்து கொண்டனர்.கண்காட்சியில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் செயல்பாடுகள், சட்ட உதவிகள், தேசிய மக்கள் நீதிமன்றத்தின் பயன்கள் குறித்த புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தன.
Next Story