கட்டபொம்மன் நினைவு மணிமண்டபம் அமைப்பதற்கு வருவாய்துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார்*

X
அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடியில் மாமன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு மணிமண்டபம் அமைப்பதற்கு வருவாய்துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடி புறவழிச்சாலை உடையநாதபுரம் விலக்கு பகுதியில் சமுதாய அமைப்பு சார்பில் மாமன்னர் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு நினைவு மணிமண்டபம் கட்டப்பட உள்ளது. இந்த மணிமண்டபம் அமைப்பதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் கலந்துகொண்டு புதிய மணிமண்டபம் அமைப்பதற்காக பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார். இந்த மணிமண்டபத்தில் வீரபாண்டிய கட்டபொம்மனின் 12 அடி உயரம் கொண்ட திருவுருவச் சிலையும் அமைய உள்ளது. இந்த நிகழ்ச்சியில் சமுதாய நிர்வாகிகள், திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன், இங்கு அமைய உள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் சிலையை பார்க்கும் போது அவரைப்போல வீரத்துடன் இருக்க வேண்டும், தன்மானத்துடன் இருக்க வேண்டும், யாருக்கும் அடிபணியாதவனாக இருக்க வேண்டும், எல்லோருக்கும் வேண்டியவனாக இருக்க வேண்டும், எல்லா சமுதாயத்தினரையும் அரவணைத்து செல்ல வேண்டும் என்ற உணர்வை நாம் பெற வேண்டும் என்ற எண்ணத்தோடு தான் இந்த சிலையை அமைக்கிறோம் என பேசினார்.
Next Story

