சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பிரச்சாரம்

சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பிரச்சாரம்
X
குமாரபாளையத்தில் தேசிய பசுமை படை சார்பில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு வாகன பிரச்சாரம்
நாமக்கல் தேசிய பசுமை படை சார்பாக சுற்றுச்சூழல் விழிப்புணர்வு தகவல் வண்டி பிரச்சாரம். மத்திய அரசு சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்றத்துறை உதவியுடன் தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறையும், நாமக்கல் மாவட்ட தேசிய பசுமை படை மற்றும் கடமலைக்குண்டு லா தொண்டு நிறுவனமும் இணைந்து, நாமக்கல் மாவட்டத்தில் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவியர் மத்தியில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு தகவல் வண்டி பிரச்சாரம் கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெற்றது. குமாரபாளையத்தில் பிப்ரவரி 2 அன்று நடைபெற்ற கலை நிகழ்ச்சியை கொல்லிமலை பல்லுயிர் பாதுகாப்பு அறக்கட்டளையின் உறுப்பினர் திரு கே எஸ் பன்னீர்செல்வம் அவர்கள் தலைமையேற்று நடத்த, விடியல் ஆரம்பம் பவுண்டேசன் தலைவர் திரு விடியல் பிரகாஷ் அவர்கள் தொடங்கி வைத்தார். உழவர் சந்தை பேருந்து நிலையம் ராஜம் தியேட்டர், ஆனங்கூர் பிரிவு, பள்ளிபாளையம் பிரிவு சாலை, உள்ளிட்ட இடங்களில் விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது. இதில் லா தொண்டு நிறுவனம் சார்பாக நாடகம், கிராமப்புற நடனம், கரகாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட நிகழ்வுகள் மூலம் ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் கேரி பேக் பயன்படுத்தாமல்,தமிழ்நாடு அரசின் மீண்டும் மஞ்சப்பை திட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பொது மக்களுக்கு துணிப்பை வழங்கப்பட்டது. நாமக்கல் மாவட்டத்தில் இந்த நிகழ்வு இரண்டு நாட்கள் நடைபெற்றது. இந்நிகழ்வில் பஞ்சாலை சண்முகம், நல வாரிய நலவாரிய செல்வராஜ் அபெக்ஸ் கிளப் செயலாளர் சம்பத், மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
Next Story