அரசு அனுமதியின்றி மாட்டு வண்டியில் மணல் திருடிய இரண்டு நபர்களை கைது செய்து

ரூபாய் 3000 மதிப்புள்ள 1/2 யுனிட் மணல் மற்றும் மாட்டுவண்டியும்,பறிமுதல்
அரசு அனுமதியின்றி மாட்டு வண்டியில் மணல் திருடிய இரண்டு நபர்களை கைது செய்து பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு உட்கோட்டம் குன்னம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இன்று 02.02.2025 மாட்டு வண்டியில் மணல் திருடுவதாக கிடைத்த இரகசிய தகவலின்படி குன்னம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சங்கர் மற்றும் அவரது குழுவினர் அகரம் சீகூர் பகுதியில் சிறப்பு ரோந்து மேற்கொண்ட போது ரெட்டிகுடிகாடு கலை விமலா திருமண மண்டபம் அருகே வெள்ளாற்றில் ,இருந்து மாட்டு வண்டியில் மணல் திருடிக்கொண்டு வந்த இரண்டு நபர்களில் ஒருவரை பிடித்து விசாரித்தபோது
1) பாண்டுரங்கன் 46/25 த/பெ கோவிந்தசாமி, அரியலூர் மெயின் ரோடு, அகரம் சீகூர், குன்னம் தாலுக்கா, பெரம்பலூர் மாவட்டம். 2) சூர்யா 24/25 த/பெ கொளஞ்சி, ரெட்டிக்குடிகாடு, குன்னம் தாலுகா, பெரம்பலூர் மாவட்டம்.
ஆகியோர்கள் என்பது தெரியவர மேற்படி இரண்டு நபர்களை கைது செய்து வழக்கு பதிவு செய்து மேற்படி இரு எதிரியிடமிருந்து ரூபாய் 3000 மதிப்புள்ள 1/2 யுனிட் மணல் மற்றும் மாட்டுவண்டியும்,பறிமுதல் செய்த குன்னம் காவல்நிலைய காவல்துறையினர் மேற்படி எதிரியை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
Next Story