தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக கருப்பு தினமாக அனுசரிப்பு

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக  கருப்பு தினமாக அனுசரிப்பு
X
அகில இந்திய ஆசிரியர் கூட்டணியின் அறிவிப்பிற்கு இணங்க, பழைய ஓய்வூதிய திட்டத்தை இரத்து செய்த நாளான பிப்ரவரி 1 ம் தேதி கருப்பு தினமாக கருப்பு பட்டை அணிந்து எதிர்ப்பு
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக பிப்ரவரி 1ம் தேதி கருப்பு தினமாக அனுசரிப்பு அகில இந்திய ஆசிரியர் கூட்டணியின் அறிவிப்பிற்கு இணங்க, பழைய ஓய்வூதிய திட்டத்தை இரத்து செய்த நாளான பிப்ரவரி 1 ம் தேதி கருப்பு தினமாக கருப்பு பட்டை அணிந்து எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பெரம்பலூர் மாவட்டக் கிளையின் சார்பில் 01.02. 2025, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பெரம்பலூர் மாவட்டக் கிளை அலுவலகம் முன்பாக பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் மத்திய,மாநில அரசுக்கு எதிர்ப்பு விதமாக தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளர் (பொ) ஈ.இராஜேந்திரன் தலைமையில் கருப்பு பட்டை அணிந்து அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிகழ்வில்மாவட்டத் தலைவர் சந்திரசேகரன், மாவட்ட பொருளாளர் புகழேந்தி,மாநில பொதுக்குழு உறுப்பினர் புஷ்பாமேரி, மாவட்ட துணைச் செயலாளர்கள் மணிவண்ணன், ரவிச்சந்திரன், மாவட்ட துணை தலைவர் கரிகாலன், பெரம்பலூர் வட்டார செயலாளர் அமல்ராஜ், பி.ராஜேந்திரன், பி. கே.ரமேஷ் , பிரேம்குமார், ரங்கராஜ், தேவராஜன், பெரம்பலூர் தனியார் கிளை வட்டார செயலாளர் செல்வம், ஆலத்தூர் வட்டாரச் செயலாளர் பாலசந்திரன், வட்டாரத் தலைவர் அசோக், வேப்பூர் வட்டார செயலாளர் இராமரத்தினம், பிச்சைப்பிள்ளை, வேப்பந்தட்டை வட்டார தலைவர் வஹாப், மணி, துரைராஜ்,ஆல்ட்ரின், ரோஸ்லின், தேவராஜன் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Next Story