முத்து விழா மற்றும் பள்ளியின் முப்பதாவது ஆண்டு விழா கொண்டாட்டம்.
பெரம்பலூர் - தனலட்சுமி சீனிவாசன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் முத்து விழா மற்றும் பள்ளியின் முப்பதாவது ஆண்டு விழா கொண்டாட்டம் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் முத்து விழா மற்றும் பள்ளியின் முப்பதாவது ஆண்டு விழா 31.01.2025 அன்று தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தின் மாண்பை வேந்தர் உயர்திரு அ சீனிவாசன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவின் சிறப்பு விருந்தினராக எழுத்தாளர் மற்றும் பெண்ணிய சிந்தனையாளர் கவிஞர் இளம்பிறை அவர்கள் கலந்து கொண்டார். இவ்விழாவில் இந்த ஆண்டு சாதனை படைத்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தின் மாண்பமை வேந்தர் அவர்கள் பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்கி பாராட்டினார்கள். தொடர்ந்து இவ்விழாவில் தலைமை உரையாற்றிய தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தின் மாண்பை வேந்தர் அவர்கள் நமது தனலட்சுமி சீனிவாசன் பள்ளி 1994 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 2025 ஆம் ஆண்டு வரை சிறப்பாக செயல்பட்டு வருகிறது நம் பள்ளியில் படித்த மாணவர்கள் உலகம் முழுவதும் பல்வேறு துறைகளில் சாதனை படைத்து வருகிறார்கள் எனவும், நம்மால் முடியாது என்ற எண்ணங்கள் இல்லாமல் எதையும் நம்மால் சாதிக்க முடியும் என்ற உயர்ந்த எண்ணத்தோடு மாணவர்கள் படித்து தங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்று கூறினார்கள். இவ்விழாவில் பேசிய சிறப்பு விருந்தினர் கவிஞர் இளம்பிறை அவர்கள் படிப்பு என்பதற்கு ஏழை பணக்காரன் என்ற பாகுபாடு இல்லை உலகில் அழிக்க முடியாத செல்வம் கல்வி மட்டும் தான் என்றும் கல்வியால் மட்டுமே ஒருவருடைய வாழ்க்கை தரம் உயரும் என்பதை எடுத்து கூறினார். இவ்விழாவில் 1994 முதல் 2024 வரை பள்ளியில் படித்து ஜெர்மனி, துபாய், சிங்கப்பூர், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் முன்னாள் மாணவர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன. இவ்விழாவில் தனலட்சுமி சீனிவாசன் அறக்கட்டளை உறுப்பினர்கள், தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் முதல்வர்கள், துணை முதல்வர்கள், பெற்றோர்கள் என ஏராளமான கலந்து கொண்டார்கள். விழாவில் பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் வேற்றுமையில் ஒற்றுமை என்பதை பறைசாற்றும் விதமாக இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் பாரம்பரிய நடன நிகழ்ச்சிகளை பிரமாண்ட முறையில் அரங்கேற்றினார்கள். விழாவின் வரவேற்புரையை பள்ளியின் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவி சாநியாஹணி வழங்க ஆண்டு அறிக்கையை பள்ளியின் முதல்வர் முனைவர் சஷிதா தொகுத்து வழங்கினார். இறுதியாக நன்றியுறையை பள்ளியின் துணை முதல்வர் சதீஷ்குமார் அவர்கள் வழங்கினார்கள்.
Next Story



