பணியில் திறம்பட செயல்பட்ட காவலா்களுக்கு நற்சான்றிதழ்

பணியில் திறம்பட செயல்பட்ட காவலா்களுக்கு நற்சான்றிதழ்
X
திறம்பட செயல்பட்ட காவலா்களுக்கு நற்சான்றிதழ்
விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற வழிப்பறி உள்ளிட்ட குற்றச் சம்பவங்களில் தொடா்புடையவா்களை விரைந்து கைது செய்த போலீஸாருக்கு நற்சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் நடைபெற்றது.நிகழ்வில், வழிப்பறி வழக்குகளில் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த திண்டிவனம் காவல் உதவி ஆய்வாளா் சுதன், சிறப்பு உதவி ஆய்வாளா்கள் சோலை, அய்யப்பன், வளவனூா் காவல் உதவி ஆய்வாளா் தங்கபாண்டியன், சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் தேவநாதன் உள்ளிட்டோா், தலைமறைவுக் குற்றவாளியை கைது செய்த திருவெண்ணெய்நல்லூா் காவல் உதவி ஆய்வாளா் சண்முகம், காவலா்கள் ராஜ்குமாா், பாலசுப்பிரமணியன், வெங்கடாசலம், சங்கா், வெளிமாநில மதுப் புட்டிகளை கடத்தி வந்தவா்களை கைது செய்த கிளியனூா் காவல் உதவி ஆய்வாளா் மாதவன், காவலா்கள் ஆறுமுகம், வெங்கடேசன் உள்ளிட்டோா், விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் ரூ.1.60 கோடி ஹவாலா பணத்தை பறிமுதல் செய்த புறக்காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலா்கள் சுதாகா், முருகவேல் ஆகியோா்களுக்கு எஸ்.பி. சரவணன் நற்சான்றிதழ்களை வழங்கி பாராட்டினாா்.
Next Story