தனியார் கல்லூரி பஸ் மோதி விவசாயி பலி

X
தனியார் கல்லூரி பஸ் மோதி விவசாயி பலி ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் அருகே தொப்பம்பாளையம் பகுதியை சேர்ந்த வர் சுப்பையா (வயது 82). விவசாயி. இவர் நேற்று முன்தினம் தொப்பம்பாளையம் அருகே ஏரிதோட்டத்தில் உள்ள தனது சகோதரரை பார்த்துவிட்டு மோட்டார்சைக்கிளில் திரும்பி வந்து கொண்டிருந்தார். தொப்பம்பாளையம் மேடு பகுதியில் ரோட்டை கடந்த போது அந்த வழியாக வந்த தனியார் கல்லூரி பஸ் சுப்பையாவின் மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ் பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சுப்பையா உயிரிழந்தார். இதுகுறித்து பவானிசாகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

