ஜனாதிபதி உரை: குமரி மக்கள் தேவைகளை உட்படுத்தி  திருத்த வேண்டும் - எம்.பி

ஜனாதிபதி உரை: குமரி மக்கள் தேவைகளை உட்படுத்தி  திருத்த வேண்டும் - எம்.பி
X
குமரி
கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு :-        கன்னியாகுமரி கடற்கரை கிராமங்களில் ஏற்படும் கடலரிப்பு மூலம் கிராமங்கள் பாதிக்கபடுவதை குறித்து பல நேரங்களில் நாடாளுமன்றத்தில் எடுத்துரைத்த போதும் அது குறித்த எந்த அறிவிப்பும் இல்லை. அது போன்று மீன் வளம், மற்றும் மீனவர்களுக்கு என தனி அமைச்சகம் என்பது நீண்ட நாள் கோரிக்கை. அது குறித்தும் எதுவும் கூறப்படவில்லை.  குமரி மாவட்டத்திற்கு புற்றுநோய் குறித்த ஆராய்ச்சி மையம், ரப்பர் ஆராய்ச்சி மையம் ஆகியவை பல வருடங்களாக மக்கள் கோரி வருகின்றனர். அது ஜனாதிபதி உரையில் குறிப்பிடப்படவில்லை. கன்னியாகுமரி மாவட்டத்தில் சுற்றுலாவை மேம்படுத்த திட்டங்கள் தேவை என பல நாட்களாக கோரி வருகின்றோம். அதுவும் இந்த அரசு கண்டுகொள்ளவில்லை.      ஆகவே இவற்றை ஜனாதிபதி உரையில் உட்படுத்தி திருத்தம் கொண்டு வரவேண்டும் என முன்மொழிந்துள்ளேன். என கூறியுள்ளார்.
Next Story