அருள்மிகு ஸ்ரீ வரசக்தி விநாயகர் ஸ்ரீ கூட்டக்கரசாமி, ஸ்ரீ ரேணுகாம்பாள், ஸ்ரீ பச்சையம்மன் ஆலய கும்பாபிஷேக விழா.

சுற்று வட்டாரப் பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த சிறுவள்ளூர் அருகே உள்ள சேங்கபுத்தேரி ஏரிக்கு வடக்கே அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ வரசக்தி விநாயகர் ஸ்ரீ கூட்டக்கரசாமி, ஸ்ரீ ரேணுகாம்பாள், ஸ்ரீ பச்சையம்மன் ஆலய புனராவர்தன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இரண்டாம் கால யாக பூஜைகள், ஆரம்பம் விசேஷ திரவிய ஓமம், கடம் புறப்பாடு மூலவர் மற்றும் பதிவார தேவதைகளுக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது இந்நிகழ்வில் சிறுவள்ளூர், கலசப்பாக்கம், ஆதமங்கலம் புதூர், சேங்கப்புத்தேரி உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Next Story