பேரறிஞர் சிலைக்கு மாலை அணிவித்த அமைச்சர்.
மதுரை மாவட்டத்தில் பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு இன்று (பிப்.3)மதுரை வடக்கு மாவட்ட தி.மு.க சார்பில் வாடிப்பட்டியில் மதுரை மத்திய கூட்டுறவு வங்கி கிளை அருகிலிருந்து பேருந்து நிலையம் வரை அமைதி பேரணி வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி தலைமையில் நடைபெற்றது. உடன் சோழவந்தான் எம்எல்ஏ வெங்கடேசன் மற்றும் திமுக முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.அதனை தொடர்ந்து அங்குள்ள பேரறிஞரின் சிலைக்கு அமைச்சர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
Next Story




