அதிமுக சார்பில் அண்ணா நினைவு தினம் அனுசரிப்பு
தமிழக முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 56வது நினைவு நாளையொட்டி இன்று காலை 11 மணிக்கு தருமபுரி மாவட்ட அதிமுக சார்பில் நான்கு ரோடு பகுதியில் அமைந்துள்ள அண்ணா சிலைக்கு அமைப்பு செயலாளர் முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன், மாநில விவசாய பிரிவு தலைவர் டி.ஆர்.அன்பழகன், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் எஸ்.ஆர்.வெற்றிவேல்,பாப்பிரெட்டிப்பட்டி எம்எல்ஏ கோவிந்தசாமி,நகர செயலாளர் பூக்கடை ரவி உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இதில் அண்ணா தொழிற்சங்க செயலாளர் பழனிச்சாமி தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல இணைச் செயலாளர் பிரசாத் மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகள் ஒன்றிய பேரூர் நகர கழக நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.
Next Story






