லாரி மோதி விபத்து அரசுப் பள்ளி ஆசிரியர் உயிரிழப்பு
திருவள்ளூர் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்து அரசுப் பள்ளி ஆசிரியர் உயிரிழப்பு உடலை மீட்டு போலீசார் விசாரணை திருவள்ளூர் மாவட்டம்,மீஞ்சூர் அருகே உள்ள காட்டுப்பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை அரசினர் உயர்நிலைப்பள்ளி இயங்குகிறது. இந்தப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் அரசன் என்பவர் இன்று காலை பள்ளிக்கு செல்வதற்காக தனது இருசக்கர வாகனத்தில் காட்டுப்பள்ளிக்கு செல்லும்போது எண்ணூர் காமராஜர் துறைமுகம் எதிரில் லாரி மோதி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். தகவல் அறிந்து காட்டூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோன்று நேற்று பத்தாம் வகுப்பு பள்ளி மாணவன் தனது தாய் மாமன் உடன் இதே சாலையில் உடல் நசுங்கி பலியான நிலையில் இன்று மீண்டும் ஒரு விபத்து சம்பவத்தால் பள்ளி ஆசிரியர் பலியான சம்பவம் அப்பகுதியில் வாகன ஓட்டிகளிடம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து இப்பகுதியில் கனரக வாகனங்களால் ஏற்படும் விபத்துகளை குறைப்பதற்கு அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகள் எழுந்துள்ளது.
Next Story




