சாமி தரிசனம்

X
பவானி அருகே உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பட்டமளிப்பு விழா இன்று நடைபெறுவதை முன்னிட்டு 2021 மற்றும் 23 வரை பயின்ற சுமார் 540 மாணவ மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா என்று நடைபெற்றது இதனைத் தொடர்ந்து விழாவில் கலந்து கொள்வதற்காக இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பவானி சங்கமேஸ்வரர் கோவிலுக்கு தனது மனைவி வசந்தி ஆகியோருடன் பவானி சங்கமேஸ்வரர் கோவிலுக்கு வந்த சாமி தரிசனம் செய்தார். பின்னர் முக்கூடல் சந்திக்கும் கூடுதுறையை பார்வையிட்டார் பின்னர் ஆதிகேச பெருமாள், சன்னதியில் சாமி தரிசனம் செய்த அவர் பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்பொழுது அவர் கூறியதாவது. பழமையான திருத்தலங்களில் ஒன்றாகும் திகழும் சங்கமேஸ்வரர் கோவிலும், பவானி கூடுதுறைக்கு தற்போது தான் முதல் முறையாக வந்துள்ளேன். இந்த வழியாக பலமுறை பயணம் செய்திருந்தாலும், முதல் முறையாக இக்கோயிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.தொடர்ந்து,விண் வெளி துறையில் இந்தியா மகத்தான சாதனை நிகழ்த்தி வருகிறது. இஸ்ரோ தலைவராக பொறுப்பேற்றுள்ள நாராயணன் அவர்கள் அனுபவம் மிக்க விஞ்ஞானி அவரதுவழிகாட்டிதால் விண்வெளித்துறைபெரும்சாதனை படைத்து நிலவில் மனிதன் வசிக்க முடியுமா? அங்குள்ள இயற்கை வளங்கள் மனித குலத்துக்கு பயன்படுமா? என்றெல்லாம் கேள்வி இருந்தது ஆனால் சந்தரயான் திட்டத்தின் மூலம் நிலவினை ஆராய்ந்தோம் அங்கு நீர் இருப்பதைகண்டறிந்தோம். மேலும் நிலவின் தென் துருவத்தில் அமைதியாக சூழல் உள்ளது குறித்து கண்டறிந்ததுள்னோம். எதிர்காலத்தில் கால சூழல் மாற்றங்கள், புவி வெப்பம் மயமாதல், நீர்வள ஆய்வு நில வள ஆய்வு, உள்ளிட்ட புதிய தொழில் நுட்பங்கள் மேலும் மேலும் ஆராய பேருதவியாக இருக்கும். அமெரிக்கா கண்டம் கண்டு பிடிக்கப்பட்டதற்கு முன்பு யாருக்கும் தெரியாது. இன்று அதன் சிறப்புகளை எல்லோரும் அறிந்துள்ளோம். இதேபோல வரும் காலத்தில் இந்திய நாடு விண்வெளி துறையில் மகத்தான சாதனை நிகழ்த்தும் என இவ்வாறு கூறினார். நிகழ்ச்சியில் அவருடன் வாசவி கல்லூரியின் முதல்வர் பொறுப்பு மலர்விழி மாதேஸ்வரன் மற்றும் கல்லூரி நிர்வாகிகள் அவரோடு உடன் இருந்தார்
Next Story

